Friday, July 29, 2005
Smile
And da guy lived happily ever after.
இது சொந்த ஜோக் இல்லை. Courtesy: deccan
Have a great weekend.
Thursday, July 28, 2005
தெய்வம் !
எங்கள் தெருவில் ஏறக்குறைய 100 குடிசை வீடுகள் நெருக்கமாய் 3 வரிசைகளில் இருக்கும். எங்கள் வீடு நடுவில் நடு நாயகமாய் இருந்தது. எங்கள் வீட்டின் முன்னேயும் பின்னேயும் முறையே கீற்றினால் வேயபட்ட பந்தலும் கொட்டாயும் இருந்தன.அது ஆடி மாதம் ஆகையால் தீ பயங்கரமாய் பரவ ஆரம்பித்து இருந்தது. தீ ஆரம்பித்தது கடைசி தெருவில். ஓடுகள் வேயபட்ட வீடுகள் சுலபத்தில் பற்றாது என்றாலும் பற்றி கொண்டால் அவ்வளவுதான். மர சட்டங்களில் இருக்கும் ஆணிகள் எரியும் சிறு மர துண்டுகளோடு ராக்கெட்டாய் நாலா திசைகளிலும் பறக்கும். அவை இன்னும் பல வீடுகளில் விழும் அவையும் எரிய ஆரம்பிக்கும்.
எங்கள் வீட்டில் இருந்து எடுக்க நேரமும் இல்லை, தோணவும் இல்லை. அம்மாவையும், தாத்தாவையும் அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பியாயிற்று. இரண்டு தெருக்கள் நன்றாய் எரிய ஆரம்பித்து இருந்தன. வெளியேறிய மக்களில் கொஞ்சம் பேர் தெரு முனையில்(மூன்று தெருக்களும் சேரும் இடம்) நின்று அழுது கொண்டு இருக்கின்றனர். மீதி பேர் முடிந்ததை அள்ளி எடுத்து போட்டனர். அப்போது என்னிடம் ஒருவர் சொன்னார்(கத்தினார்), "டேய், உங்க பாட்டி உள்ள மாட்டிகிட்டாங்க பாரு!". அப்போதுதான் எனக்கு பாட்டியின் ஞாபகம் வந்தது.
எங்கள் தெருக்கள் நெருக்கமானதாய் இருக்கும். என் பாட்டி தெருவின் உள்ளே வீட்டின் முன்னே அங்கும் இங்கும் ஓடிகொண்டு இருந்தது புகையின் நடுவே தெரிந்தது. இளங்கன்று பயம் அறியாது என்பதன் அர்த்தம் எனக்கு அன்று புரிந்தது. கொஞ்சமும் யோசிக்காமல் தெருவினில் புகுந்தேன். உங்களுக்கே தெரியும் சாதாரண ஒரு குப்பைதொட்டி எரியும் போதே அதன் அருகில் அனல் அடிக்கும். 3 தெருக்கள் எரியும் போது எப்படி இருக்கும் என்பது எழுத்துக்களில் சொல்லி புரியும் விஷயம் அல்ல. நான் உள்ளே போனதன் காரணங்கள் இரன்டு. ஒன்று, பாட்டியை காப்பாற்ற வேண்டுமென்ற வேகம். இன்னொன்று, எனக்கு அனல் அடிக்கும் என்று தெரியாது.
10 அடி தெருவினில் ஓடியிருப்பேன். நெருப்பை விட அனல் காற்று கொடுமையானது. காற்று வேகமாய் வீசி கொண்டு இருந்ததால் ஒரு அனல் அலை என்னை அதே வேகத்தில் வெளியே எறிந்தது. அப்பப்பா! இப்போது நினைத்தாலும் குலை நடுங்கவைக்கும் அனுபவம் அது. என்னை ஒரு கை தூக்கி விட்டது. அவர் கேட்டார் என்ன ஆச்சு? என்று. நான் சொன்னவுடன் அவர் சொன்னார் "திரும்பி உள்ள போகாதீங்க ! நான் பாத்துக்கறேன்" என்று. புகையினூடே அவர் உள்ளே ஓடியதை பார்த்தேன்.
நான் என் தந்தையை பார்த்துவிட்டு திரும்பி ஓடி வந்த போது என் பாட்டியை அவர் கொண்டு வந்து விட்டு இருந்தார். அந்த குழப்பத்தில் அவர் யார் என்று நான் கவனிக்க வில்லை. அவரும் போய்விட்டார். அதன் பிறகு இருந்த பொருள்கள் எல்லாம் திருடு போனது, வீடு இழந்த எல்லாரும் 1 மாதம் பக்கத்தில் இருந்த பள்ளியில் தங்கி இருந்தது, என் பாட்டிக்கு குணமாக 1 மாதம் ஆனது எல்லாம் தனி கதை.
இது எல்லாம் முடிந்து 2 மாதங்கள் இருக்கும். கட்டில் போட்டு வெளியே படுத்து இருந்தேன். ஒருவர் வந்தார். அவர் தான். என் பாட்டியை காப்பாற்றியவர் தான். தாமாகவே அறிமுக படுத்தி கொண்டார். என் பாட்டியை காப்பாற்றிய விஷயத்தையும் சொன்னார். அவருக்கு குணமாக ஒரு மாதத்திற்க்கும் மேலாக ஆனதாக சொன்னார். மெல்லிய வேஷ்டி கட்டி இருந்தார். அவரின் தழும்புகளை காட்டினார். என் பாட்டியின் காயங்களை விட அவை மோசமானதாக இருந்தன. காரணம் ஓடி வரும் போது அனல் காற்று முழுதும் இவர் மீது வீசி இருந்தது.
"சரி பாஸ்! பார்க்கலாம்" என்று தட்டி கொடுத்து விட்டு போனார். அவருக்கு ஏதாவது தேவையா என்று நான் யோசிப்பதற்குள் அவர் போயிருந்தார்.அதற்கப்புறம் என்ன தேடியும் அவரை பிடிக்க முடியாமல் போயிற்று.
தேவாலயங்களில் ஒவ்வொரு திருப்பலியின் போதும் நம் சொந்தங்களுக்காகவும் , நம் தேவைகளுக்காகவும் வேண்டும் போது அவரை நினைத்து பார்பதுண்டு.
Wednesday, July 27, 2005
நம்பிக்கை!
கட்டிலின் அடியில் வானில்விட்ட
பட்டங்கள் அடுக்கி, பம்பரம் சொடுக்கி
காய்ந்த பன்னை நீரில் நனைத்து
யூனிபாரத்தில் என்னை அமுக்கி
கால்தடுக்கி பள்ளிக்கு ஓடும்போது
அம்மாவின் கண்களில் தெரிந்ததுதான்
நம்பிக்கையின் கீற்றோ!!!
Narayanan Venkittu அவர்களின் கவிதை போட்டிக்கான என்னுடைய கவிதை இது.
Monday, July 25, 2005
Bloggers Day !
Bits
எதார்த்தமாய் சானல் திருப்பி நேற்று இரவு தூக்கம் போனது. அந்தமான் மற்றும் சென்னையில் அதிர்வுகள் என்று. சென்னையில் பெரிதாய் ஒன்றும் இல்லை என்று கேட்டு விட்டு பார்த்தால் ஆந்திராவிலும் அதிர்வுகள் என்று செய்தி. சுனாமி 1245 மணிக்கு தாக்கும் என்று சொன்னதால் லேசாய் பயம் வந்தது. 1200 மணி வரைக்கும் இருந்துவிட்டு சுனாமி வந்தால் பார்த்து கொள்ளலாம் என்று தூங்கி போனேன்
Friday, July 22, 2005
கவிதை, கவிதை!!
Wednesday, July 20, 2005
என் பணம், உன் பணம்!
இன்றைக்கு blog-ல் எழுத விஷயம் இல்லையே என்று எண்ணி கொண்டிருந்த போது இந்த தற்கொலை கண்ணில்பட்டது. அது என்னவென்று தெரியவில்லை. வெறும் தற்கொலை விஷயங்கள் தான் இப்பொது கண்ணில் படுகின்றன.
மெட்டி ஒலி விஷயம் முடிந்து இன்னும் முழுதாய் ஒரு மாதம் கூட முடியவில்லை.அதற்குள் இன்னொன்று.
அய்யா, பிரச்சினை இதுதான். சரண்யா ஒன்பதாம் வகுப்பு மாணவி. இந்த அஞ்சலி தேவி (இவுங்க ஒன்பதாம் வகுப்பு டீச்சர்) வைத்து இருந்த 1200 ரூபாயை காணவில்லை. அதனால் அஞ்சலி தேவியும் இன்னும் இரண்டு டீச்சரும் தனி அறையில் சரண்யாவின் உடைகளை கலைந்து சோதனை போட்டு உள்ளார்கள்.
விளைவு : சரண்யா தற்கொலை.
இதற்க்கு அந்த ஆசிரியர்கள் தான் முதற் காரணம் என்றாலும் நாம் எல்லாருமே இதற்க்கு காரணம். "நாம்" என்று நம் சமுதாயத்தை சொல்கிறேன். நாம் நம் பிள்ளைகளுக்கு தன்மானம்(இதை ஒன்ன வைச்சுகிட்டு நாம அடிக்கிற கூத்து இருக்கே!) தன்மானமும் தேவைதான். போராடும் குணம் இல்லாமல் தன்மானம் மட்டும் வைத்து கொன்டு என்ன செய்ய?
தன்மானம் பற்றி நிறைய சொல்லித்தருகிறோம். முக்கியமாக அசிங்கங்களையும் அவமானஙளையும், அவற்றை சந்திக்க சொல்லி தருவதில்லை. உன்னை உன் ஆடைகளை கலைய சொல்லி சோதனை போடுவது ஒரு நிகழ்வு. அந்த பெண் சின்ன பெண் அல்ல. 15 வயது நிரம்பிய 9-ஆம் வகுப்பு படிக்கும் பெண். எப்பொது நம் பிள்ளைகளுக்கு நாம் போராட கத்துகொடுக்க போகிறோம்?
நான் அந்த ஆசிரியையின் செயலை சரி என்று சொல்லவில்லை. ஆசிரியர்கள் கொடுங்கோலை தள்ளி வைத்து விட்டு, அன்பாலும் அரவணைப்பாலும் பாடம் நடத்துவதுதான் முறை. 1200 ருபாயை பத்திரமாய் வைது கொள்ள முடியவில்லை இந்த டீச்சரால். சரண்யாவே எடுத்து இருந்தாலும் அந்த ஆசிரியை செய்தது தவறுதான்.
எரியும் மெழுகுவர்த்தியைவிட கொழுத்திய தீக்குச்சி மேல் என்று படித்தததாய் ஞாபகம். இன்னமும் போராட நாம் பயப்படுவதால் தான் இன்னமும் கணக்கற்ற பெண்கள், திருமணமானவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தினந்தோறும் பஸ்ஸில், தெருவில், கடைகளில் அவதி படுகிறார்கள்.
சரண்யாவின் தற்கொலைக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
அந்த வகுப்பு டீச்சரா, அந்த பள்ளிகூடமா, அவரின் பெற்றோரா, இல்லை நம் சமுதாயமா? இல்லை சரண்யா மட்டும் தானா?
Tuesday, July 19, 2005
ஹாய் சென்னை !
ப்ரொஜெக்ட டைமில் டெலிவெரி கொடுப்பது சுலபமா இல்லை, கடைக்கு போய் ரங்கனாதன் தெருவில் துணி வாங்குவது சுலபமா? என்ன செய்வது, மனம் தளராத விக்கிரமாதித்தன் போல முயற்சி செய்து கொஞ்சம் வெற்றியும் கிடைத்தது. அதுவும் ஆடி தள்ளுபடின்னு போனா இங்கேயும் அங்கேயும் தள்ளுராங்க. ஒரே தள்ளல் மயம்.
எந்த city போனாலும் அது நம்ம சென்னை traffic போல வருமா?
வழிபாடுகளும், வழிபாட்டு ஸ்தலங்களும் வியாபாரமாகிவிட்ட நிலையிலும், என்னை பரவசப்படுத்தும் இடங்களில் இதுவும் ஒன்று.
Monday, July 18, 2005
கலிகாலம் !
இந்த கேள்வியை கேட்டு ஒரு போன் நம்பரும் தரும் ஹோர்டிங்குகளை சென்னையில் இரண்டு இடங்களில் (கோடம்பாக்கம் மற்றும் எக்மோர்-ல்) பார்தேன். இன்னும் எவ்வளவு இடங்களில் இருக்கின்றதோ?
அபத்தத்தின் உச்சகட்டம். நடிகர், நடிகைகளை கடவுளாக்கி தூக்கி கொண்டாடும் பழக்கம் எவ்வளவு புரையோடி போய் இருக்கிறது என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு.
இப்படியே போனால் பின் வரும் ஹோர்டிங்குகளை சீக்கிரம் பார்க்கலாம்.
சூர்யாவிற்கு பிடித்த சாக்ஸ்-இன் கலர் என்ன?
சிம்ரனின் கணவர் நேற்று மதியம் சாப்பிட்டபின்பு எந்த கையை முதலில் கழுவினார்?
த்ரிஷா ட்ரைவ்-இன்னில் எவ்வளவு டிப்ஸ் வைத்தார்?
கலிகாலம்! கொடுமைடா சாமி!
(ஜோதிகாவின் ரசிகர்கள் மன்னிக்க)
Autograph
சென்னையில் 2 நாட்கள் தங்க வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல் சுற்றல் தான். autograph-kku விருது கிடைத்து இருக்கும் வேளையில் எனக்கும் கொஞ்சம் அல்ல, நிறைய பழைய நினைவுகள். சிக்கிரம் போஸ்ட் பண்ணுகிறேன்.
Wednesday, July 13, 2005
Mails to the Almighty!
And these letters are placed in the Western Wall in Jerusalem by the postal department staff there.
Wonder what would God's mail id would be!
Any idea?
Pic : sify
Serial Killer ??
சித்திரகுப்தன் எழுதியதை பார்த்து இருந்தால் நிச்சயமாய் தண்டனை இதுதான் எழுதியிருப்பார்.
தண்டனை : "இவன் வீட்டுக்காரம்மா சீரியல் பார்க்கும்போது இவனும் பார்க்கணும். அதிலும் சன் TV-ல் வரும் 'கணவருக்காக' சீரியலை கட்டாயம் பார்க்கணும்".
9.30 PM- செல்வி
1000 PM- மனைவி
1030 PM- கணவருக்காக.
ஒரு மனிதனை குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்க இந்த சீரியல்கள் போதும். அன்னியன் ஒவ்வொருதனையா தேடி போய் கொன்னாரு. இந்த சீரியல் டைரக்டர் ஒரு வீடு, 4 கதாபாத்திரங்களை வைத்து உட்கார்ந்த இடத்தில் இருந்து கொல்லுவார். ஓரே ஒரு வித்தியாசம். இவரு நிரபராதிகளையா(நாந்தான் அது, நாந்தான் அது!!) கொல்லுவாரு.
"கணவருக்காக" :
கணவனின் காதலியை அடையாளம் தெரியாதாம். அவள் பர்தா போட்டுகொண்டு இவளிடம் பேசுவாளாம். நம் தமிழ் படங்களில் கமலும் ரஜினியும் வேஷம் போட்டுகொண்டு(பெரிய மீசை, கன்னத்தில் மச்சம்) வில்லனை கொல்வார்களே அது போல. சாமி எததனை நாளைக்குடா இது மாதிரி. இந்த சீரியலில் இன்னொரு கொடுமை. எல்லாரும் தனியே நின்று 1 பக்க வசனம் பேசுவார்கள்(நம்மளுக்கு புரியாது என்று டைரக்டர் புரிய வைக்கிறார். புல்லரிக்குதுங்க சார்.
"மனைவி" :
இந்த சீரியலில் ஒரு நாயகி, புகுந்த வீட்டுக்காக தான் கர்ப்பம் என்று பொய் சொல்லி(ஏன் என்பது இன்னொரு கதை) எல்லா அவமானங்களையும் தாங்கி கொள்கிறாள். அந்த மாமியார் விஷயம் தெரியாமல் இந்த பெண்ணை பாடாய் படுத்துகிறார். கத்துகுட்டியாய் பார்க்கும் நமக்கே இதில் இருக்கும் ஓட்டைகள் தெரியும். என்ன செய்ய முடியும்?
இதில் வேறு 500-வது எபிசோட், 650-வது எபிசோட் என்று விழாக்கள். அதை பார்க்க முடியாமல் எங்கேயாவது ஒரு ஷம்மீம் பானுவோ, மைதிலியோ, சுந்தரமுர்த்தியோ தற்கொலை செய்து கொள்வார்கள்.
ஆகையால் மகா ஜனங்களே தமிழ் சானெல் வரமாட்டேன்குதே என்று வருத்தம் வேண்டாம். நீங்கள் புண்ணியம் செய்து இருக்கிறீர்கள். என்று தணியும் இந்த சீரியல் தாகம்?
Monday, July 11, 2005
Stephen Schwartz
After hearing Illayaraja's Thiruvaasagam yesterday , I understand what Stephen Schwartz meant. This is what I had written in my previous post
Following is the letter written by Stephen Schwartz (America's topmost opera play writer). Fr.Jegath who worked closely with Illayaraja in this project "Thiruvasagam in Symphony" remembered me and has mailed me this letter. Please refer my post on Thiruvasagam by Illayaraja here.
“Last night, at sony studios in New York City, I had the pleasure of hearing the almost – finished mix of Ilaiyaraaja’s amazing work. It is unlike anything I’ve ever heard before, a stunning blend of Indian and of western music and instruments. I asked Mr. Raaja if this was something different for him too, and he said he had never done anything like this piece before. I don’t know if anyone has. So I believe those of you looking forward to this are in for a great treat. The section to which I contributed English words is about twenty minutes long and dovetails back and forth between Mr. Raaja singing in Tamil and an American singer singing in English, plus there is a large and beautifully prouced chorus. Mr. Raaja’s orchestrations are superb, and the recording engineer, Richard King, has done a spectacular job sonically. I felt so very proud to be a small part of this project. The entire project for me has been an enjoyable and fascinating experience from beginning to end, and I feel extremely lucky to have been asked by Mr. Raaja to participate. I can promise you with confidence you are in for a major treat when you hear Thiruvasakam in Symphony”.
- Mr. Stephen Schwartz
Remarkable ! Isnt it? Isaignani is isaignani!
Thursday, July 07, 2005
Ullam kaetkumae !
A casual script, some college remembrances, excellent visuals and good if not excellent music, you get Ullam Kaetkumae. But there are lot of places you feel that Jeeva's films are stereotyped. You can match this movie with 12 B in its songs and picturizations. And a slight touch of Alaypaayuthey and its flashback scenes. Thats make you think whether Jeeva has gone out of creative ideas.
It has taken three years for the movie to come out. When it started, Laila was a star and Asin and Pooja were beginning their acting careers. That also explains the star combination and the film's ending. But now its exactly the opposite. Aryaa, Asin and Pooja are stars while Shaam and Laila are fading out. Laila's character is portrayed to such a level that you get irritated the moment she steps in the frame. Arya's character is so calm and neat that I started liking that guy after this movie. He was good in "Arindhum ariyaamalum" also. His voice gave him a certain girlish kind of a soft nice image. As usual, jeeva's movies have excellent visuals and this movie is not an exemption. Particularly, the college song(dhoda, dhoda) and its choreography. In the end you want to be entertained with not much serious story lines you can definitely go for ullam kaetkumae.
Anniyan threatening with swaying hairs, chandramukhi's horror with lakka lakka, mumbai express a technical comedy, Ullam kaetkumae is a simple story with an autograph opening and a story with its own pace.
Wednesday, July 06, 2005
கடவுள் பாதி மிருகம் பாதி!
ஸ்டார் விஜய்-ல் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி உங்களின் வயிற்றை நிச்சயம் புண்ணாக்கும். வண்டு, நண்டு, சிண்டு என வரும் காமெடியில் சில வாரங்களாக இரண்டு அர்த்த வாக்கியங்கள் நெளிய வைக்கின்றன.
இந்த வாரம் அவர்கள் கலாய்த்த படம் அன்னியன். சும்மா சொல்லகூடாது. அன்னியனில் விக்ரம் டாக்டரிடம் பேசும் காட்சியை அப்படியே பயன்படுத்தி கொண்டது ரசிக்கும் படியாக இருந்தது.பேய் போல வரும் வண்டுவின் டயலாக்குகள் கொஞ்சம் விரச நெடி அடித்தாலும் ரசிக்கலாம்.
அன்னியனை பற்றி ஏற்கெனவே நிறைய விமர்சனங்கள் வந்து விட்டதாலும் நம் நண்பர்கள் ஏற்கெனவே அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டதாலும், என் பங்குக்கு கொஞ்சம்.
படம் பார்த்து கொண்டு இருந்தபோது, வீட்டுக்காரம்மா கமென்ட்: "இது நான் இந்தியன் ல பாத்துட்டேன்". இறுதியில் மனசில் நிற்பது சுஜாதாவின் டயலாக்குகள் மற்றும் விவேக்கின் ரயில் சீன்கள்தான்.
Tamil
இன்று முதல் தமிழில் கொஞ்சம் எழுதலாம் என்று உத்தேசம்.
Friday, July 01, 2005
Ponniyin Selvan
I was thinking about writing about this Kaaviyam for quite some time and finally...I have seen Ponniyin Selvan being read by various people from my school days but unfortunately I got the interest to pick it up very late. Then only I understood the reason why PS has captured millions of readers and still is.
Even though the novel is Ponniyin Selvan, the hero is Vandhiya Thevan. As you move into chapters, this character would broaden out in your mind and occupies till the end. This happens the same for all the characters thats present in PS. Thats were the geniousness of Kalki comes into play.
Pic: kalki
His novel covers almost the complete span of characters in the Chola empire at that time. .The main characters are Vandhiyathevan, Kundhavai, Ponniyin Selvan, Karikaalan, Nandhini, Pazhuvaettarayar, Poonguzhali, Manimegalai. The story explains Vandhiyathevan's life with Karikaalan, Kundhavai and Ponniyin Selvan. Kalki succeeds in making you an audience for all those events happening and you eventually feel that you are one among the crowd standing in one of those roads inside the palaces in Thanjavur(Don't blame if you dont get the same feel that I got). Hailing from the same place and seen those places, I was able to visualise those events almost to perfection. There were a couple of places that I was not able to place because we dont have the same names around today.
In the end there are a couple of questions for which Kalki leaves us to answer ourselves. He has explained in a note that he has here and there included his own script. I bought a paperbook edition some time back since the pdf's and html's didnt give me a proper satisfaction. Even though I have read it twice before, i still feel the freshness and doesnt bore me a little.
Movie list
All time favourites
Rather than saying that the following movies are the best, these are those movies which I remember. Most of these movies are hits, some you would not even heard of.
Mudhal mariyaadhai-Watching some of Sivaji films nowadays reminds you that he over-acts, but definitely not this movie
Thalapathi-I would prefer Thalapathi for Baasha. Rajini was at his natural after Mullum malarum
Mouna raagam-Karthik, Mohan and Revathi, PC, Maniratnam, Illayaraja. This movie would not have worked if you have left anyone out of these 6
Aalayamani- I liked this movie for its excellent songs
Raaja Paarvai - kamal's way of portrayal in this movie
Salangai Oli - a treat to watch music and dance together.
Andha Naal - A thriller starring Sivaji
Kurudhipunal - This movie proved that we too can make good action thrillers
Nayagan
Roja
Idhayakamalam - A great movie to watch
Raththa Kanneer- I have always been a fan of M R Radha. You should see his performance in this movie. Even though there would not be much alterations in his presentations, he never bored me. Fun to watch.
The following are comedies that I have seen countless number of times
Kadhalikka Naeramillai
Sabhash meena- A must see for all those comedy lovers. Combination of Sivaji and Chandrababu
Subscribe to Posts [Atom]