Wednesday, July 20, 2005
என் பணம், உன் பணம்!
இன்றைக்கு blog-ல் எழுத விஷயம் இல்லையே என்று எண்ணி கொண்டிருந்த போது இந்த தற்கொலை கண்ணில்பட்டது. அது என்னவென்று தெரியவில்லை. வெறும் தற்கொலை விஷயங்கள் தான் இப்பொது கண்ணில் படுகின்றன.
மெட்டி ஒலி விஷயம் முடிந்து இன்னும் முழுதாய் ஒரு மாதம் கூட முடியவில்லை.அதற்குள் இன்னொன்று.
அய்யா, பிரச்சினை இதுதான். சரண்யா ஒன்பதாம் வகுப்பு மாணவி. இந்த அஞ்சலி தேவி (இவுங்க ஒன்பதாம் வகுப்பு டீச்சர்) வைத்து இருந்த 1200 ரூபாயை காணவில்லை. அதனால் அஞ்சலி தேவியும் இன்னும் இரண்டு டீச்சரும் தனி அறையில் சரண்யாவின் உடைகளை கலைந்து சோதனை போட்டு உள்ளார்கள்.
விளைவு : சரண்யா தற்கொலை.
இதற்க்கு அந்த ஆசிரியர்கள் தான் முதற் காரணம் என்றாலும் நாம் எல்லாருமே இதற்க்கு காரணம். "நாம்" என்று நம் சமுதாயத்தை சொல்கிறேன். நாம் நம் பிள்ளைகளுக்கு தன்மானம்(இதை ஒன்ன வைச்சுகிட்டு நாம அடிக்கிற கூத்து இருக்கே!) தன்மானமும் தேவைதான். போராடும் குணம் இல்லாமல் தன்மானம் மட்டும் வைத்து கொன்டு என்ன செய்ய?
தன்மானம் பற்றி நிறைய சொல்லித்தருகிறோம். முக்கியமாக அசிங்கங்களையும் அவமானஙளையும், அவற்றை சந்திக்க சொல்லி தருவதில்லை. உன்னை உன் ஆடைகளை கலைய சொல்லி சோதனை போடுவது ஒரு நிகழ்வு. அந்த பெண் சின்ன பெண் அல்ல. 15 வயது நிரம்பிய 9-ஆம் வகுப்பு படிக்கும் பெண். எப்பொது நம் பிள்ளைகளுக்கு நாம் போராட கத்துகொடுக்க போகிறோம்?
நான் அந்த ஆசிரியையின் செயலை சரி என்று சொல்லவில்லை. ஆசிரியர்கள் கொடுங்கோலை தள்ளி வைத்து விட்டு, அன்பாலும் அரவணைப்பாலும் பாடம் நடத்துவதுதான் முறை. 1200 ருபாயை பத்திரமாய் வைது கொள்ள முடியவில்லை இந்த டீச்சரால். சரண்யாவே எடுத்து இருந்தாலும் அந்த ஆசிரியை செய்தது தவறுதான்.
எரியும் மெழுகுவர்த்தியைவிட கொழுத்திய தீக்குச்சி மேல் என்று படித்தததாய் ஞாபகம். இன்னமும் போராட நாம் பயப்படுவதால் தான் இன்னமும் கணக்கற்ற பெண்கள், திருமணமானவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தினந்தோறும் பஸ்ஸில், தெருவில், கடைகளில் அவதி படுகிறார்கள்.
சரண்யாவின் தற்கொலைக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
அந்த வகுப்பு டீச்சரா, அந்த பள்ளிகூடமா, அவரின் பெற்றோரா, இல்லை நம் சமுதாயமா? இல்லை சரண்யா மட்டும் தானா?
Subscribe to Posts [Atom]