Wednesday, July 06, 2005
கடவுள் பாதி மிருகம் பாதி!
ஸ்டார் விஜய்-ல் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி உங்களின் வயிற்றை நிச்சயம் புண்ணாக்கும். வண்டு, நண்டு, சிண்டு என வரும் காமெடியில் சில வாரங்களாக இரண்டு அர்த்த வாக்கியங்கள் நெளிய வைக்கின்றன.
இந்த வாரம் அவர்கள் கலாய்த்த படம் அன்னியன். சும்மா சொல்லகூடாது. அன்னியனில் விக்ரம் டாக்டரிடம் பேசும் காட்சியை அப்படியே பயன்படுத்தி கொண்டது ரசிக்கும் படியாக இருந்தது.பேய் போல வரும் வண்டுவின் டயலாக்குகள் கொஞ்சம் விரச நெடி அடித்தாலும் ரசிக்கலாம்.
அன்னியனை பற்றி ஏற்கெனவே நிறைய விமர்சனங்கள் வந்து விட்டதாலும் நம் நண்பர்கள் ஏற்கெனவே அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டதாலும், என் பங்குக்கு கொஞ்சம்.
படம் பார்த்து கொண்டு இருந்தபோது, வீட்டுக்காரம்மா கமென்ட்: "இது நான் இந்தியன் ல பாத்துட்டேன்". இறுதியில் மனசில் நிற்பது சுஜாதாவின் டயலாக்குகள் மற்றும் விவேக்கின் ரயில் சீன்கள்தான்.
Subscribe to Posts [Atom]