Wednesday, July 13, 2005

Serial Killer ??

இந்த ஜென்மத்தில் நான் செய்யும் பாவங்களுக்கெல்லாம் அடுத்த ஜென்மத்தில் தண்டனை அனுபவிக்கனும். ஆகையால், போன ஜென்மத்தில் நான் செய்த பாவங்களுக்கெல்லாம் இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறேன். அதுதான் விதி. நான் செய்த பாவங்கள் தெரியவில்லை. ஆனால் தண்டனை தெரியும்(அதுதான் அனுபவிக்கிறேனே!)

சித்திரகுப்தன் எழுதியதை பார்த்து இருந்தால் நிச்சயமாய் தண்டனை இதுதான் எழுதியிருப்பார்.

தண்டனை : "இவன் வீட்டுக்காரம்மா சீரியல் பார்க்கும்போது இவனும் பார்க்கணும். அதிலும் சன் TV-ல் வரும் 'கணவருக்காக' சீரியலை கட்டாயம் பார்க்கணும்".

9.30 PM- செல்வி
1000 PM- மனைவி
1030 PM- கணவருக்காக.

ஒரு மனிதனை குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்க இந்த சீரியல்கள் போதும். அன்னியன் ஒவ்வொருதனையா தேடி போய் கொன்னாரு. இந்த சீரியல் டைரக்டர் ஒரு வீடு, 4 கதாபாத்திரங்களை வைத்து உட்கார்ந்த இடத்தில் இருந்து கொல்லுவார். ஓரே ஒரு வித்தியாசம். இவரு நிரபராதிகளையா(நாந்தான் அது, நாந்தான் அது!!) கொல்லுவாரு.

"கணவருக்காக" :

கணவனின் காதலியை அடையாளம் தெரியாதாம். அவள் பர்தா போட்டுகொண்டு இவளிடம் பேசுவாளாம். நம் தமிழ் படங்களில் கமலும் ரஜினியும் வேஷம் போட்டுகொண்டு(பெரிய மீசை, கன்னத்தில் மச்சம்) வில்லனை கொல்வார்களே அது போல. சாமி எததனை நாளைக்குடா இது மாதிரி. இந்த சீரியலில் இன்னொரு கொடுமை. எல்லாரும் தனியே நின்று 1 பக்க வசனம் பேசுவார்கள்(நம்மளுக்கு புரியாது என்று டைரக்டர் புரிய வைக்கிறார். புல்லரிக்குதுங்க சார்.

"மனைவி" :

இந்த சீரியலில் ஒரு நாயகி, புகுந்த வீட்டுக்காக தான் கர்ப்பம் என்று பொய் சொல்லி(ஏன் என்பது இன்னொரு கதை) எல்லா அவமானங்களையும் தாங்கி கொள்கிறாள். அந்த மாமியார் விஷயம் தெரியாமல் இந்த பெண்ணை பாடாய் படுத்துகிறார். கத்துகுட்டியாய் பார்க்கும் நமக்கே இதில் இருக்கும் ஓட்டைகள் தெரியும். என்ன செய்ய முடியும்?

இதில் வேறு 500-வது எபிசோட், 650-வது எபிசோட் என்று விழாக்கள். அதை பார்க்க முடியாமல் எங்கேயாவது ஒரு ஷம்மீம் பானுவோ, மைதிலியோ, சுந்தரமுர்த்தியோ தற்கொலை செய்து கொள்வார்கள்.

ஆகையால் மகா ஜனங்களே தமிழ் சானெல் வரமாட்டேன்குதே என்று வருத்தம் வேண்டாம். நீங்கள் புண்ணியம் செய்து இருக்கிறீர்கள். என்று தணியும் இந்த சீரியல் தாகம்?


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]